நான் படித்து முடித்து வேலைக்கு வந்ததிற்கு என் பெற்றோருக்கு அடுத்த படியாக ஒரு முக்கிய காரணமாய் நான் எப்போதும் எண்ணுவது, திரு.கு. காமராசர் அவர்களைத்தான். ஆனால் அவரின் படத்தினை இப்பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்களுக்கு மட்டுமே உரியவர் என்பது போலவும் அவரின் தேசிய சாதனைகள் எல்லாம் அவரின் சாதியின் பொருட்டே நிகழ்ந்தது போலவும் அவரை கீழிறக்கி விட்டனர். இந்த அழகில் ஒரு சாதிக்கட்சி அவரின் படத்தைப் போட்டே இரு சமஉ வேறு வாங்கி விட்டார்கள்.
தேசியமும் தெய்விகமும் என் கண்கள் என முழங்கிய ஒருவரை ஒரு சாதிச் சங்கத்திற்குள் குறுக்கி விட்டார்கள் அவர் தம் சாதியினர்.
பல மொழி பல மதம் பல கலசாரம் என்று இருக்கும் இந்த தேசிய இனங்களுக்கு ஒரு பொதுவான சட்டத்தினை உருவாக்கிய ஒரு மாபெரும் மேதையை கூட இப்போது, ஒரு குறிப்பிட்ட இனத்தின் பிரதிநிதியாகத்தான் வெளிக்காட்டுகிறார்கள்.
அவரது படத்தினை வீட்டில் மாட்டலாமென்று நினத்தேன். ஆனால் இவர்கள் அடிக்கும் கூத்தில், அவர் படம் மாட்டியவர்கள் எல்லாம் அந்த இனத்தை சேர்ந்த்தவர்கள் என்பதாகத் தான் பார்க்கப் படுகிறது. அவரைப் பற்றி கொஞ்சம் பெருமையாக பேசியதற்கு உடன் வேலை செய்யும் ஒருவர் அவர் என்னை தன் இனமாக அடையாளமிட்டு விட்டார்.
ஆசிரியர் தினம் (Teachers Day)என ராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதினைப் போல, பொறியாளர் தினம் (Engineers Day) என விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல அம்பேத்கரின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக (Lawyers Day) கொண்டாடலாமே என வழக்கறிஞர் நண்பரொருவர் சொல்லி விட்டு, ஆனால் அவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என நினைத்தார்.
(தகவலுக்காக: "lawyers day in India" என Google images-ல் சொடுக்கினால் பசி, ராகுல், மமோசி குசாஎல்லாம் வர்றாங்க அம்பேத்கரை கூட்டத்தில் ஒருவராக கூட காணவில்லை)
எனவே, தங்கள் சாதியிலிருந்து பிறந்திருந்தாலும், அவர்கள் பொதுவானவர்கள் என்பதை உணர்ந்து அவர்களை ஒருவட்டத்திற்குள் சுருக்கி விடாமல். மற்ற வர்களும் அவர்களைக் கொண்டாட வையுங்கள் வழி விடுங்கள்.
(பி.கு: இதற்கு காரணம் ஒரு வகையில் காங்கிரஸ் தான், காங்கிரஸ் என்றாலே நேருவும் காந்தியும் என அவர்கள் குறுக்கியது தான். சிதம்பரம் என்றாலே பசி தான் அவர் தான் கப்பலே ஓட்டினார் என்பதாக வரலாறை மாற்றினாலும் வியப்பதிற்கில்லை)
தேசியமும் தெய்விகமும் என் கண்கள் என முழங்கிய ஒருவரை ஒரு சாதிச் சங்கத்திற்குள் குறுக்கி விட்டார்கள் அவர் தம் சாதியினர்.
பல மொழி பல மதம் பல கலசாரம் என்று இருக்கும் இந்த தேசிய இனங்களுக்கு ஒரு பொதுவான சட்டத்தினை உருவாக்கிய ஒரு மாபெரும் மேதையை கூட இப்போது, ஒரு குறிப்பிட்ட இனத்தின் பிரதிநிதியாகத்தான் வெளிக்காட்டுகிறார்கள்.அவரது படத்தினை வீட்டில் மாட்டலாமென்று நினத்தேன். ஆனால் இவர்கள் அடிக்கும் கூத்தில், அவர் படம் மாட்டியவர்கள் எல்லாம் அந்த இனத்தை சேர்ந்த்தவர்கள் என்பதாகத் தான் பார்க்கப் படுகிறது. அவரைப் பற்றி கொஞ்சம் பெருமையாக பேசியதற்கு உடன் வேலை செய்யும் ஒருவர் அவர் என்னை தன் இனமாக அடையாளமிட்டு விட்டார்.
ஆசிரியர் தினம் (Teachers Day)என ராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதினைப் போல, பொறியாளர் தினம் (Engineers Day) என விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல அம்பேத்கரின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக (Lawyers Day) கொண்டாடலாமே என வழக்கறிஞர் நண்பரொருவர் சொல்லி விட்டு, ஆனால் அவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என நினைத்தார்.(தகவலுக்காக: "lawyers day in India" என Google images-ல் சொடுக்கினால் பசி, ராகுல், மமோசி குசாஎல்லாம் வர்றாங்க அம்பேத்கரை கூட்டத்தில் ஒருவராக கூட காணவில்லை)
எனவே, தங்கள் சாதியிலிருந்து பிறந்திருந்தாலும், அவர்கள் பொதுவானவர்கள் என்பதை உணர்ந்து அவர்களை ஒருவட்டத்திற்குள் சுருக்கி விடாமல். மற்ற வர்களும் அவர்களைக் கொண்டாட வையுங்கள் வழி விடுங்கள்.
(பி.கு: இதற்கு காரணம் ஒரு வகையில் காங்கிரஸ் தான், காங்கிரஸ் என்றாலே நேருவும் காந்தியும் என அவர்கள் குறுக்கியது தான். சிதம்பரம் என்றாலே பசி தான் அவர் தான் கப்பலே ஓட்டினார் என்பதாக வரலாறை மாற்றினாலும் வியப்பதிற்கில்லை)









